வெள்ளி, 21 நவம்பர், 2014

குழு போட்டிகளில் வென்ற

 மாணவர்களும் பயிற்சி அளித்த 

ஆசிரியர்க்ளும்        அண்மையில் நடைபெற்ற மாநகராட்சி மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகளில் எங்கள் பள்ளி மாணவர்கள் 134 பரிசுகளை வென்றனர்.

        ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர்களுக்கான டாஜ் பால் போட்டிகளில் எங்கள் பள்ளியே முதல் இடத்தை பிடித்தது.

ஒன்று முதல்மூன்றாம் வகுப்பு மாவர்களுக்கான டாஜ் பால் போட்டியில் முதல் பரிசு வென்ற மாணவர்கள் மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர்கள் 
ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு மாவியர்களுக்கான டாஜ் பால் போட்டியில் முதல் பரிசு வென்ற மாணவியர்கள் மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர்கள்நான்கு,ஐந்து வகுப்பு மாவர்களுக்கான டாஜ் பால் போட்டியில் முதல் பரிசு வென்ற மாணவர்கள் மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர்கள் 


 நான்கு,ஐந்து வகுப்பு மாவியர்களுக்கான டாஜ் பால் போட்டியில் முதல் பரிசு வென்ற மாணவியர்கள் மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர்கள்


ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாவியர்களுக்கான கோ கோ போட்டியில் இரண்டாம் பரிசு வென்ற மாணவியர்கள் மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர்கள்ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாவியர்களுக்கான எறி பந்து  போட்டியில் முதல் பரிசு வென்ற மாணவியர்கள் மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர்கள்ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாவர்களுக்கான கபடி போட்டியில் முதல் பரிசு வென்ற மாணவர்கள் மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர்கள் ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாவர்களுக்கான கை பந்து  போட்டியில் முதல் பரிசு வென்ற மாணவர்கள் மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர்கள் 

வியாழன், 20 நவம்பர், 2014

மண்டல அளவிலான விளையாட்டு விழா
          சென்னை மாநகராட்சி மண்டலம் நான்கு அளவிலான விளையாட்டு போட்டிகள் எங்கள் பள்ளியில் நடைபெற்றதுஅதில் ஆறு நடுநிலை பள்ளிகள் பங்கு நடைபெற்றது
      ஆறு முதல் எட்டு வகுப்பு வரையிலான  மாணவ மாணவியர் பங்கு பெற்றனர்.  மாவர்களுக்கு கபடி, கைப்பந்து  ஆகிய போட்டிகளும் மாணவிகளுக்கு கோ கோ, எறிபந்து ஆகிய போட்டிகளும்  நடைபெற்றது.
அப்போட்டிகளில் சில காட்சிகள்.

     போட்டி காட்சிகளை படக் காட்சிகளாக மாற்றியது எங்கள் பள்ளி மாணவன் செல்வன் மேத்யூ. 


  CLEAN CHENNAI  -   CLEAN SCHOOL

எங்கள் பள்ளியின் சுகாதாரமான , தூய்மையான  சுற்றுச் சூழலை விளக்கும் குறும்படம் . இப்படத்தை தயாரித்தவர்கள் எங்கள் பள்ளி சுற்றுச் சூழல் குழு  மாணவர்கள்.

சுத்தமான பள்ளி மற்றும் தூய்மையான பள்ளி வளாகத்தை உடைய மூன்று சிறந்த மாநகராட்சி பள்ளிகளில் ஒன்றாக எங்கள் பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டது.  வணக்கத்திற்குரிய.மாநகர தந்தை திரு. சைதை துரைசாமி அவர்களால் எங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் வா.கணேஷ் குமார் அவர்களுக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டது. 

திங்கள், 10 நவம்பர், 2014

மாநகராட்சி விளையாட்டு போட்டிகள்

    சென்னை மாநகராட்சி கல்விதுறையால் நடத்ப்படும் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் எங்கள் பள்ளி 131 பரிசுகள் பெற்றுள்ளது.
  ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான டாஜ் பந்து போட்டியில் எங்கள் பள்ளி நான்கு பிரிவுகளிலும் முதல் இடத்தை பிடித்து முதல் பரிசு பெற்று 48 பரிசுகள் பெற்றது.
  ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான தொடர் ஓட்டம், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டப் பந்தயங்க்ளிலும் எங்கள் பள்ளி மாணவர்கள் முதல் பரிசை தட்டிச் சென்றனர்.
   ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான எறி பந்து (THROW BALL), கை பந்து (VOLLEY BALL), கபடி ஆகியவற்றில் எங்கள் பள்ளி மாணவ மாணவியர் முதல் இடத்தைப் பிடித்தனர்.   மாணவியருக்கான கோ-கோ விளையாட்டில் இரண்டாம் பரிசை தட்டிச் சென்றனர்.
  இந்த ஆண்டு மாணவ மாணவியர் சிறந்த முறையில் விளையாடி அதிக பரிசுகள் பெற காரணமாய் இருந்த எங்கள் பள்ளி உடற் கல்வி ஆச்ரியர் திரு.மாண்டி கோமாரி அவர்களும் மற்றும் எங்கள் பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் பாராட்ட தக்கவர்கள். 

செவ்வாய், 28 அக்டோபர், 2014

REPORT BEE அறிக்கைகள்  

        சென்னை மாநகராட்சி  நடுநிலைபள்ளிகளில்  முதல்முறையாக எங்கள் பள்ளியில்  REPORT BEE மூலம் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. 
        இது மேகக்  கணினியகம் (CLOUD COMPUTING) வழியாக செயல்படுகிறது.
       இம்முறையினால் ஆசிரியர்களது பணிபளு  குறைகிறது. மாணவர்களை பற்றி சரியான முடிவுகள் கிடைக்கிறது.

      மாணவர்களின் தேர்வு முடிவுகளை பல வண்ணங்களில்  காணலாம். மாணவர்களைப் பற்றி பல்வேறு வகையான தேர்வு முடிவுகளை அறியலாம். மாணவர்களைப் பற்றி பெற்றோர்களுடன் புள்ளிவிபரங்களுடன்  ஆலோசனை செய்ய இக்கணினி மென்பொருள் உதவுகிறது. 

வெள்ளி, 10 அக்டோபர், 2014

  • பள்ளி பாராளுமன்றம்

மானவர்களுக்கு ஜனநாயகத்தின் சிறப்புகளை எடுத்துக்காட்டவும், மக்களாட்சி தத்துவங்ககளில்நேரிடையாக பயிற்சி பெறவும் எங்கள் பள்ளியில் பள்ளி பாராளுமன்றம் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த கல்வி ஆண்டின்  பாராளுமன்ற துவக்கவிழா 23.06.2014 அன்று நடைபெற்றது.

பள்ளியில்  தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதம  அமைச்சர் , அமைச்சர்கள் உறுதிமொழி  கூறி பதவி ஏற்றுக் கொண்டனர்.


செவ்வாய், 7 அக்டோபர், 2014

மாணவர் சேர்க்கை ஊர்வலம்


சென்னை.11. பெரம்பூர் பகுதியில் அமைந்துள்ள சின்ன குழந்தை தெரு,சொக்கலிங்கம் தெரு, ரமணா நகர், ஜமாலியா குடிசை மாற்று வாரிய பகுதி, அம்பேத்கர் நகர் ஆகிய பகுதிகளில் எங்கள் பள்ளி ஆசிரியர்களாலும்  மாணவர்களாலும் கல்வி விழிப்புணர்ச்சி ஊர்வலம் நடைபெற்றது.எங்கள் பள்ளியில் செயல்படும் சிறப்பு நிகழ்வுகளை மாணவர்கள் பொதுமக்களுக்கு எடுத்துக் கூறினர்.  
வெள்ளி, 4 ஏப்ரல், 2014


எங்கள் மாணவர்களின் குறும்படங்கள்  உங்கள் பார்வைக்கு 
வியாழன், 3 ஏப்ரல், 2014


எங்கள் பள்ளியின் சிறப்புகள்

         


       எங்கள் பள்ளியில் அமைந்துள்ள 

சிறப்பம்சங்களை கூறும் பிரசுரங்கள்


குறும்படங்கள்
       எங்கள் மாணவர்கள் படிப்பில் மட்டுமல்ல 

படம் எடுப்பதிலும் சிறந்தவர்கள் என்பதை 

நிருபிக்கும்  சில குறும் படங்களில் சில. 
கல்வி குறும்படங்கள்

         
          எங்கள் மாணவர்கள் படிப்பில் மட்டுமல்ல படம் எடுப்பதிலும் சிறந்தவர்கள்.

    

        எங்கள் பள்ளி மாணவர்களின் குறும் படம் மாநகராட்சி அளவில் வெற்றி பெற்று பரிசு பெரும் காட்சிகள்.கனடா நாட்டு ஆசிரியர்கள் வருகை


               எங்கள் பள்ளிக்கு 23.01.2014 அன்று கனடா நாட்டை சேர்ந்த ஆசிரியர்கள் எங்கள் பள்ளியை பார்வையிட்டனர்.


                               அவர்கள் எங்கள் பள்ளியின் அன்றாட நிகழ்வுகளை கேட்டறிந்தனர். எங்கள் பள்ளியில் செயல்படும் பல்துறை நுண்ணறிவு ஆய்வகம், கணினி ஆய்வகம், சூரிய ஒளி மின் ஆற்றல்  பயன்படுத்துதல் ,செயல் வழி கற்றல், அறிவியல் ஆய்வகம் போன்ற செயல்பாடுகளை பாராட்டினர். பள்ளியின் செயல்பாடுகளை மேம்படுத்த ஆலோசனைகளை வழங்கினர்.ஆகாஷ் கங்கா குடிநீர்             குடிநீரால்  தான் மாணவர்களுக்கு நோய்கள் பரவுவது இயற்கை. ஆனால் எங்கள் பள்ளி மாணவர்களுக்கு இந்த கவலை இல்லை. எங்கள் பள்ளியில் மாணவர்கள்  அனைவருக்கும்    கை படாத , சுத்தமான, சுகாதாரமான சுவையான குடிநீர் வழங்க்கப்படுகிறது . அதுதான் ஆகாஷ் கங்கா  குடிநீர் .


          காற்றின் ஈரப்பதத்திலிருந்து தருவிக்கப்படும் சுவையான குடிநீரே ஆகாஷ் கங்கா குடிநீர் ஆகும்.  எங்கள் பள்ளி மாணவர் அனைவருக்கும் இச்சுவையான நீர் குடிநீராக வழங்க்கப்படுகிறது.