திங்கள், 10 நவம்பர், 2014

மாநகராட்சி விளையாட்டு போட்டிகள்

    சென்னை மாநகராட்சி கல்விதுறையால் நடத்ப்படும் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் எங்கள் பள்ளி 131 பரிசுகள் பெற்றுள்ளது.
  ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான டாஜ் பந்து போட்டியில் எங்கள் பள்ளி நான்கு பிரிவுகளிலும் முதல் இடத்தை பிடித்து முதல் பரிசு பெற்று 48 பரிசுகள் பெற்றது.
  ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான தொடர் ஓட்டம், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டப் பந்தயங்க்ளிலும் எங்கள் பள்ளி மாணவர்கள் முதல் பரிசை தட்டிச் சென்றனர்.
   ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான எறி பந்து (THROW BALL), கை பந்து (VOLLEY BALL), கபடி ஆகியவற்றில் எங்கள் பள்ளி மாணவ மாணவியர் முதல் இடத்தைப் பிடித்தனர்.   மாணவியருக்கான கோ-கோ விளையாட்டில் இரண்டாம் பரிசை தட்டிச் சென்றனர்.
  இந்த ஆண்டு மாணவ மாணவியர் சிறந்த முறையில் விளையாடி அதிக பரிசுகள் பெற காரணமாய் இருந்த எங்கள் பள்ளி உடற் கல்வி ஆச்ரியர் திரு.மாண்டி கோமாரி அவர்களும் மற்றும் எங்கள் பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் பாராட்ட தக்கவர்கள். 

1 கருத்து:

  1. நிசப்தம் தளத்திலிருந்து தங்களைப் பற்றி அறிந்து இங்கே வந்திருக்கிறேன்.
    வலைப்பூவைக் காண மகிழ்ச்சி.
    கனவுகளை நனவாக்கும் அனைத்து மாணவர்களுக்கும், கனவுகளை கைப்பிடிக்க தூண்டும் ஆசிரியப் பெருந்தகைகளுக்கும், உதவும் அன்பு நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு