வெள்ளி, 1 மே, 2015

கோடை  சிறப்பு முகாம்


எங்கள் பள்ளியில் இந்த ஆண்டு கோடை கால சிறப்பு முகாம் 21.04.2015முதல் 31.04.2015 வரை நடைபெற்றது.  இம் முகாமில்  சென்னை நடுநிலை பள்ளி, மடுமாநகர், சென்னைநடுநிலை பள்ளி, கோபாலபுரம்,  சென்னை நடுநிலை பள்ளநியூ காமராஜர் நகர் ஆகிய பள்ளிகளை சேர்ந்த  மாணவர்கள் பங்கு பெற்றனர்.

                 இப்பயிற்சியில் 60 மாணவ மாணவிகள் பங்கு பெற்றனர்.  மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி  முகாமை அமெரிக்கன் இந்தியன் ஃபவுண்டேஷன் அமைப்பு சென்னை  மாநகராட்சியுடன் இணைந்து நடத்தியது.

                  இப்பயிற்சி முகாமில் மாணவர்களுக்கு குறும் படம் தயாரித்தல் , திரைக்கதை அமைத்தல், ஒளிப்பதிவு செய்தல், படம் தொகுத்தல், இயக்குதல் ஆகிய துறைகளில் பயிற்சி அளிக்கப்பட்டது.
   
                மாணவர்கள் குழுக்களாக விளம்பரங்கள், குறும் படங்கள் ஆகியவற்றை தயாரித்தனர். இப்பயிற்சி முகாமில்  செல்வி. மீனாட்சி, செல்வி.வினோதினி அவர்கள் இணைந்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.



இப்பயிற்சி முகாமில் சில துளிகள் :