வியாழன், 20 மார்ச், 2014

 எங்கள் பள்ளி மாணவர்களின் விளையாட்டு திறமை    

      எங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்கள் மாநகராட்சி அளவில் நடந்த விளையாட்டு போட்டிகளில் பரிசுகள் பல வென்றுள்ளனர்.  மண்டல அளவில் நடந்த போட்டிகளில்   66    மாணவ மாணவியர்கள் வெற்றி பெற்று பரிசுகளைக் கைப்பற்றினர்.               மாநகராட்சி அளவில் நடந்த போட்டிகளில்  4  பேர் முதல் இடத்தையும்,    2 பேர் இரண்டாம் இடத்தையும் ,     8 பேர் மூன்றாம்  இடத்தையும்  பெற்று வெற்றி பெற்றனர்.           மாநகராட்சி அளவில்  நடந்த விளையாட்டு போட்டியில் எங்கள் பள்ளியைச் சேர்ந்த செல்வன். மூ.கார்த்திக்,  செல்வி. மூ. கலைசெல்வி ஆகிய இருவரும் சாம்பியன் கோப்பை பெற்றனர் .                 வணக்கத்திற்குரிய மாநகரத் தந்தை திரு. சைதை துரைசாமி அவர்கள் சாம்பியன் கோப்பை வழங்கும் காட்சி . செல்வன் . மூ.கார்த்திக்,  செல்வி. மூ.கலைச்செல்வி இருவரும் சகோதர சகோதரிகள் என்பது குறிப்பிடத்தக்கது .               
உதவிக் கல்வி அலுவலர் திருமதி.ரஞ்சனி , கல்வி அலுவலர்  திரு. பேரின்பராஜ் , துணை மேயர் திரு.பெஞ்சமின் ,   மேயர் திரு. சைதை துரைசாமி, மற்றும் எங்கள் பள்ளி ஆசிரியர்கள் திருமதி.புனிதவதி ,திருமதி.ராஜலக்ஷ்மி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக